×

வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின் அனிமேஷன் காணொலியை நீக்க வலியுறுத்தி ஏராளமான பயனர்கள் புகார்..!!

டெல்லி: வெறுப்புணர்வு பிரச்சார புகார்களை அடுத்து பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காணொலி நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இந்துக்களின் சொத்துக்களை கைப்பற்றி இஸ்லாமியர்களுக்கு பங்கிட்டு கொடுத்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு எழுந்ததுடன் தேர்தல் ஆணையத்திலும் புகார்கள் குவிந்தன. இந்த நிலையில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சினை முன்வைத்து பாஜகவின் அதிகார பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்பட்ட அனிமேஷன் காட்சி சர்ச்சையை மேலும் அதிகரித்தது.

இந்த வெறுப்புணர்வு காணொளியால் அதிர்ச்சியடைந்த ஏராளமான பயனர்கள் இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். வகுப்பு வாத பரப்புரை விடியோவிற்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து பாஜகவின் அதிகார பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காணொலி நீக்கப்பட்டுள்ளது. இதனை பாஜகவே நீக்கியதா அல்லது இன்ஸ்டாவின் தாய் நிறுவனமான மெட்டாவின் தணிக்கை குழு அகற்றியதா என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

The post வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின் அனிமேஷன் காணொலியை நீக்க வலியுறுத்தி ஏராளமான பயனர்கள் புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Bharatiya Janata Party ,Instagram ,Congress ,India ,Hindus ,Islamists ,
× RELATED பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்...